Advertisement

பாரம்பரிய சின்னங்கள் விழிப்புணர்வில் யுனெஸ்கோ தன்னார்வலர்கள்!

மாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்கள் குறித்த விழிப்புணர்வை வலியறுத்தி, மாமல்லபுரம் கலைச்சின்னங்கள் வளாகத்தை, யுனெஸ்கோ தன்னார்வ குழுவினர் துாய்மைப்படுத்தினர். யுனெஸ்கோ தன்னார்வ குழுவினர், மாமல்லபுரம் கலாசார சின்னங்கள் பாதுகாப்பு குறித்து, பகுதிவாசிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, இங்கு முகாமிட்டுள்ளனர். கலாசாரம் உணர்த்தும் பாரம் பரிய சின்னங்களை அறிந்து, அடுத்தடுத்த தலைமுறையினரின் அறிதலுக்காக பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்து, பகுதிவாசிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, தென்கொரியா, ஸ்பெயின்; பிரான்ஸ் ஆகிய நாட்டினர் ஆறு பேர், இந்தியர் ஒருவர் என, முதன்முறையாக இந்நகரில் முகாமிட்டு உள்ளனர். இங்குள்ள பாரம்பரிய வளாகங்களில், குப் பை, பிளாஸ்டிக் ஆகியவை அகற்றினர். வலையன்குட்டை பிடாரி ரத வளாக புற்கள், முட்செடிகள் ஆகியவற்றை, அகற்றி துாய்மைப்படுத்தினர். இதுகுறித்து, யுனெஸ்கோ தன்னார்வலர்கள் கூறுகையில், ‘பாரம்பரிய சின்னங்களின் சிறப்பு, முக்கியத்துவம் ஆகியவை கருதி, அவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியம்; இந்திய பாரம்பரிய சின்னங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பங்கு கொண்டதில் மகிழ்ச்சி’ என்றனர்.

Advertisement
 
Advertisement