Advertisement

விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா!

உடுமலை: உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியையொட்டி, நேற்று அபிேஷக பூஜை நடந்தது. சங்கடஹர சதுர்த்தியையொட்டி, உடுமலை, ஜி.டி.வி.லே– அவுட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், செல்வ விநாயகருக்கு நேற்று அபிேஷகம், அலங்காரம், அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. தளி ரோடு, போடிபட்டியில் உள்ள, காரியசித்தி விநாயகர் கோவிலில், சுவாமிக்கு, சிறப்பு அபிேஷகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் நேற்று மாலை சுவாமிக்கு, அபிேஷகம் செய்யப்பட்டு, திருநீறு அலங்காரம், சிறப்பு பூஜை, தீபாராதனை செய்யப்பட்டன. முத்தையா பிள்ளை லே–அவுட்டில் உள்ள, சக்தி விநாயகர் கோவிலில், மூலவர் சக்தி விநாயகருக்கு, கணபதி ேஹாமும், உற்சவமூர்த்தி பால விநாயகருக்கு, அனைத்து அபிேஷகங்களும், கலசாபிேஷகமும் நடந்தது. மூலவருக்கு வெள்ளிக் கவச அலங்காரம், மகா தீபாராதனை இடம்பெற்றன. உற்சவர் பாலவிநாயகர், சிறப்பு அலங்காரத்தில், கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஜல்லிபட்டியில் உள்ள, சர்வசித்தி விநாயகர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. கோவில் கும்பாபிேஷகம் கடந்த ஆக., 27 ம் தேதி நடந்ததையடுத்து, 48 நாள் மண்டல பூஜையும் நடக்கிறது. இத்துடன், சங்கடஹர சதுர்த்தியான நேற்று, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.

Advertisement
 
Advertisement