Advertisement

ஆஸ்திரேலியாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய இந்து கோவில்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்களுக்காக, மெல்போர்ன் நகரில் கட்டப்பட்டுள்ள, மிகப்பெரிய துர்க்கை கோவிலுக்கு, நவ., 30ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த, 2004ல், ஆஸ்திரேலியாவில், 1.33 லட்சம் இந்தியர்கள் வசித்தனர்; தற்போது, 4 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதனால், அந்நாட்டில் வளர்ந்து வரும் மதங்களில், இந்து மதமும் இடம் பெற்றுள்ளது. இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில், சிறு, சிறு கோவில்கள் இருந்தாலும், வெங்கடேஸ்வரா, சிவா - விஷ்ணு, முருகன் மற்றும் இஸ்கான் கோவில்கள் பிரபலமானவை. இந்நிலையில், ஒரே இடத்தில் அனைத்து தெய்வங்களையும் வழிபடும் வகையில், மிகப்பெரிய கோவில் கட்டவேண்டும் என்ற, ஆஸ்திரேலிய இந்தியர்களின் எண்ணம் தற்போது நிறைவேறியுள்ளது. விக்டோரியா மாகாண தலைநகர் மெல்போர்ன் நகருக்கு அருகே, ராக்பேங்க் என்ற இடத்தில், மிகப்பெரிய துர்க்கை கோவில் கட்டப்பட்டு உள்ளது.ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற, இந்தக் கோவிலின் கட்டுமான பணி முடிவடைந்து, பக்தர்களின் வழிபாட்டுக்கு தயாராக உள்ளது. நவ., 30ல், கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது; அதில், ஏராளமான இந்தியர்கள் பங்கேற்க உள்ளனர்.

Advertisement
 
Advertisement