Advertisement

விழுப்புரம் திரவுபதி அம்மனுக்கு 108 விளக்குகள் பூஜை!

விழுப்புரம்: விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. விழாவையொட்டி கடந்த 29ம் தேதி கோவிலில் காலை 9:00 மணிக்கு கணபதி, மகாலட்சுமி, நவக்கிரகம், திரவுபதி அம்மனுக்கு மூலமந்திர ஹோமம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 108 திருவிளக்கு பூஜையில் திரவுபதி அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement