Advertisement

வெயிலின் தாக்கம்: வற்றி வரும் கங்கை!

அலகாபாத்: நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால்,கங்கை நதி வற்றி வருகிறது. யமுனா, சரஸ்வதி நதிகள் கங்கையுடன் இணையும் பிரயாகை என்ற இடத்தில் நதி வற்றியுள்ளது, அப்பகுதி உள்ளூர் மக்களை பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

இது தொடர்பாக உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், இன்று நிலைமை மிகவும்மோசமாக உள்ளது. நதியில் தண்ணீர் இல்லை. மக்கள் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு நடந்தே செல்கின்றனர். கங்கை நதியில் தண்ணீர் அளவு மிகவும் குறைவாக இருப்பது மிகவும் கவலையாக உள்ளது. இதனால் பிரயாகைக்கு உள்ள முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்ற கவலை உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை பார்த்து மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். நாடு முழுவதும் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. தெலுங்கானா மற்றும் ஒடீசா மாநிலங்களில் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement
 
Advertisement