Advertisement

ஏழை மக்களின் வசதிக்காக திவ்ய தரிசனம் தொடக்கம்!

திருப்பதி : ஆந்திர மாநில அறநிலையத்துறை, திவ்ய தரிசனம் என்ற பெயரில், புதிய சுற்றுலா திட்டத்தை தொடங்க உள்ளது. இதன்படி, ஆந்திர மாநிலத்தில் உள்ள, ஏழை எளிய மக்களுக்கு, இலவசமாக திருக்கோவில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், ஆண்டுதோறும், 10 ஆயிரம் பேர் என, ஆண்டுக்கு, 1.30 லட்சம் பேரை, இந்த இலவச திருக்கோவில் சுற்றுலாவில் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.இதில், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டுமே, முன்னுரிமை தரப்பட உள்ளது. இதற்காக ஆண்டிற்கு, அறநிலையத்துறை, 50 கோடி வரை நிதி ஒதுக்க உள்ளது. இதற்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒப்புதல் அளித்துள்ளார். வரும் ஜூலை முதல், இந்த புதிய திட்டம், அமல்படுத்தபட உள்ளது.

Advertisement
 
Advertisement