Advertisement

செல்லாண்டியம்மன் ஆடி குண்டம் விழா: பக்தர்கள் பரவசம்!

திருப்பூர் : செல்லாண்டியம்மன் கோவில், குண்டம் திருவிழாவில், பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்பூர், நொய்யல் கரையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில், 10ம் ஆண்டு ஆடி குண்டம் விழா நடைபெற்று வருகிறது.

13ல், கிராம சாந்தியுடன் துவங்கிய விழாவில், 15ல், பூச்சாட்டு விழா; 18ல், முனி பூஜை, கணபதி ஹோமம்; 19ல், கொடியேற்றுதல் நடைபெற்றது. அதே தினம், நொய்யல் நதிக்கரையில் இருந்து சக்தி அழைத்து வருதல், வீரராகவபெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வரும் வைபவம் உள்ளிட்டவை நடைபெற்றன. நேற்று முன்தினம், குண்டம் திறப்பு, பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அம்மை அழைத்தல், திருக்கல்ய õணம், குண்டத்துக்கு அக்னி இடுதல் ஆகியன நடைபெற்றது. நேற்று காலை, 6:00 மணிக்குல, நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், குண்டம் இற ங்கினர். பூசாரி, அருளாளர்கள் மற்றும் சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்கள் உள்பட, நுõற்றுக்கணக்கானோர் குண்டம் இறங்கினர். அதன்பின், அக்னி அபிஷேகம், மாவிளக்கு, பொங்கல் விழா, மாலையில், பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement
 
Advertisement