Advertisement

செம்பனார் கோயிலில் பக்தர்கள் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன்!

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த செம்பனார்கோயிலில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக் கிழமை அன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது வழக்கம். இவ்வாண்டு 100க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் மேலமுக்குட்டில் உள்ள ஸ்ரீ தாதா வினாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர்.

பம்பை வாத்தியம் முழுங்க முக்கிய வீதிகள் வழியாக வந்த பக்தர்கள் தாங்க ள் எடுத்து வந்த பாலை அம்பாளுக்கு அபிஷேகம் செய்தனர். இதனையடுத்து அம்பாளுக்கு சந்தனகாப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நேர்த்திக்கடனாக வேப்பிளை மாலை அணிந்து, மாவிளக்கு போட்டு அம்பாளை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு நடனக்கலைஞர்கள் சிவன், பா ர்வதி, வினாயகர் மற்றும் முருகன் வேடமணிந்து வந்து நடனமாடினர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement
 
Advertisement