Advertisement

கோவையில் கிருஷ்ணஜெயந்தி விழா: சுவாமிக்கு தங்கத்தாமரை அர்ச்சனை!

கோவை: பீளமேடு இஸ்கான் ஜெகன்நாதர் கோவிலிலில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, சுவாமிக்கு, தங்கத் தாமரையால், கனக கமல அர்ச்சனை’ நடந்தது. கோவை கொடிசியா அருகே உள்ள, இஸ்கான் ஜெகன்நாதர் கோவிலில், நேற்று கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப் பட்டது. காலை 4:15 மணிக்கு, மங்கள ஹாரத்தியுடன் கிருஷ்ணஜெயந்தி நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, சிருங்கார ஹாரத்தி, ஸ்ரீமத் பாகவத உபன்யாசம், அகண்டநாம சங்கீர்த்தனம், சுபமத்யான ஹாரத்தி, துளசி பூஜை, சந்தியா ஹாரத்தி ஆகியவை நடந்தன. இரவு உறியடி உற்சவம் நடந் தது. கிருஷ்ணர் வேடமணிந்த, குழந்தைகளும் பெரியவர்களும், உறியடி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இரவு 10:00 மணிக்கு, மஹா அபிஷேகமும், அஷ்டோத்ர ஸத மஹா கலசாபிஷேகம், கனக கமல அபிஷேகமும் நடந்தது. பக்தர்களால் சுவாமிக்கு வழங்கப்பட்ட, 108 தங்கத்தாமரைகளால், சுவாமிக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.

ஜெகன்நாதர் கோவிலில் வீற்றிருக்கும், பலதேவர், ஜெகன்நாதர், சுபத்ராதேவி ஆகியோருக்கு, கிருஷ்ண ஜெயந்தியை யொட்டி, புத்தாடைகள், புதிய வஸ்திரங்கள், ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர். இஸ்கான்’ அமைப்பு சார்பில், ஸ்ரீமத் பாகவதம் சிறப்பு சொற்பொழிவும், அகண்ட நாம சங்கீர்த்தனமும் நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்த பக்தர்களுக்கு, பிரசாதங்கள், பகவான் கிருஷ்ணரின் போட்டோக்கள் வழங்கப்பட்டன. கோவையிலுள்ள பெருமாள் கோவில்களிலும், கிரு ஷ்ணஜெயந்தி விழா நேற்று மாலை கொண்டாடப்பட்டது. கிருஷ்ணரின் பிறப்பை நினைவுபடுத்தும் வகையில், அவரது கால் சுவடுகளை, கோவில் நுழைவு வாயிலில், கோலங்களாக பச்சரிசி மாவில் அச்சிட்டிருந்தனர். கிருஷ்ணருக்கு பிடித்த, பால், தயிர், வெண்ணெய், நெய் மற்றும் இனிப்பு வகைகளை தயாரித்து, வழிபாடு செய்தனர்.

Advertisement
 
Advertisement