Advertisement

ராமானுஜர் 1000 அவதார பெருவிழா: திருக்கோஷ்டியூரில் துவக்கம்

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூரில் ராமானுஜரின் 1000ஆவது அவதாரப் பெருவிழாவை முன்னிட்டு நடைபெறும். மகாயக்ஞம், தீபாராதனை மற்றும் பிரார்த்தனைக்கான யாகசாலை பூஜை இன்று மாலை துவங்குகிறது. திருக்கோஷ்டியூரில் 960 ஆண்டுகளுக்கு முன்பு, ராமானுஜர் திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் திருமந்திரப் பொருளை உபதேசம் பெற்றார். உலக மக்கள் நன்மைக்காக திருக்கோஷ்டியூரில் உபதேசித்தார். ராமானுஜரின் 1000 ஆவது திருநட்சத்திர வருடமாக இருப்பதால், திருக்கோஷ்டியூரில் நவநரசிம்ம சுதர்சன விஸ்வசாந்தி மகாயக்ஞம், கோடி தீபாராதனை, கோடி ஜப பிரார்த்தனை நடத்தப்பட உள்ளது. அதை முன்னிட்டு இன்று மாலை 4:30 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. அக்.1 முதல் அக்.12 வரை தினசரி காலை 7:00 மணிக்கும், மாலை 4:00 மணிக்கும் கோடி தீபம் ஏற்றி சிறப்பு பிரார்த்தனை, காலை 9:00 மணிக்கு பிரார்த்தனை நடைபெறும். ஏற்பாட்டினை நவநரசிம்ம கமிட்டி மற்றும் சவுமிய நாராயண எம்பெருமானார் சாரிட்டபிள் டிரஸ்ட் செய்கின்றனர்.

Advertisement
 
Advertisement