Advertisement

அய்யாவாடி பிரத்தியங்கிரா கோவிலில் நிகும்பலா யாகம்

மயிலாடுதுறை: அய்யாவாடி கோவிலில் நடந்த, நிகும்பலா யாகத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்த அய்யாவாடியில், மகா பிரத்தியங்கிரா தேவி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், அமாவாசைதோறும், மிளகாய் வற்றலால் நடத்தப்படும் நிகும்பலா யாகம் பிரசித்தி பெற்றது. மஹாளய அமாவாசையான நேற்று மதியம், 1:00 மணிக்கு, 16 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, யாக குண்டத்தில், மிளகாய் வற்றல், பட்டு புடவைகளை போட்டு, நிகும்பலா யாகம் நடத்தப்பட்டது. பின், மகா பிரத்தியங்கிரா தேவிக்கு, அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.அடுத்த அமாவாசை, தீபாவளிக்கு மறுநாள் வருவதால், மிளகாய் நிகும்பலா யாகம் நடைபெறாது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement
 
Advertisement