Advertisement

தி.மலை ராஜகோபுர விரிசல் சரி செய்யும் பணி துவக்கம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணி, 25 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. 13 நிலைகளை உடைய, 217 அடி உயர ராஜகோபுரம், 86 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படுகிறது. ராஜகோபுரத்தின், நான்காவது துாண் மேற்கூரையில், 10 டன் பீமில், நான்கடி விரிசல் கண்டுபிடிக்கப்பட்டது. இதை, சென்னை ஐ.ஐ.டி., கட்டமைப்பு பொறியியல், ஆய்வக உதவி பேராசிரியர் அருண் மேனன், ஜூலை, 27ல் ஆய்வு செய்தார். கோபுரத்தின் விரிசல் அபாயகரமான இடத்தில் உள்ளது. அதை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் ஒட்டி சீர் செய்ய வேண்டும். கோபுரத்தின், 13 நிலைகளில் பொருத்தப்பட்டுள்ள தேக்கு மர படிகளை புதுப்பிக்க வேண்டும் என, பரிந்துரைத்தார்; கடந்த மாதம் படிகள் புதுப்பிக்கப்பட்டன. இந்நிலையில், கோபுர விரிசலை சரி செய்யும் பணியை, நிபுணர் குழுவினர் நேற்று துவக்கினர். இன்ஜினியர் ஸ்ரீதரன், டில்லி சென்டெக் நிறுவனத்தை சேர்ந்த நித்தின், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோஸ் ஆர்ட் உள்ளிட்ட, ஐந்து பேர் குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பணி, நான்கு நாட்களில் முடிவடையும் என, குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement
 
Advertisement