Advertisement

உலகின் முதல் ஆன்மீக தீம் பார்க் திருப்பதியில் உருவாகிறது!

திருப்பதி: உலகின் முதல் புராண மற்றும் ஆன்மீக தீம் பார்க், திருப்பதியில் உருவாக்கப்பட்டு வருகிறது.

உலகின் முதல் புராண மற்றும் ஆன்மீக தீம் பார்க், திருப்பதியில் சுற்றுலா மற்றும் கலாச்சார (சுற்றுலாத்துறை), ஆந்திரப் பிரதேச அரசு துறை, வைஷ்ணவி வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ,பொதுமக்கள் மற்றும் தனியார் துறை(பிபிபி) இணைந்து, 38 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு வருகிறது. தீம் பார்க்கின் மொத்த செலவு ரூ 707.40 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தேவலோகம் (Devlok) எனும் ஆன்மீக தீம் பார்க்கில் இந்தியாவின் 108 பெரிய கோவில்கள், சக்தி பீடம், உலகின் மிகப் பெரிய தியா, குண்டலினி கோபுரம், பாரத் ஆன்மீக அருங்காட்சியகம், ஆன்மீக நூலகம், ஆன்மீக வாணிகச் சரக்கு விற்பனை, ஆன்மீக தோட்டங்கள், திவ்யா தேசம் கோபுரம், இரண்டாவது மாடியில் விஸ்வ கர்மா கோவில் கட்டிடக்கலை அருங்காட்சியகம், பனி பூங்கா மற்றும் பனி உணவகம் என ஏராளமான அம்சங்களுடன் தயாராகி வருகிறது. திருப்பதி மலையடிவாரத்தில் அலிபிரி அருகே உருவாகிவரும் இந்த தீம் பார்க்கில், பக்தி அனுபவம் மட்டுமன்று, கலாச்சார பாரம்பரியத்தை மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்களையும் அனுபவிக்க முடியும்.

Advertisement
 
Advertisement