Advertisement

காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

காரைக்குடி,:காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவில், பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா கடந்த 14ம் தேதி கணபதி ேஹாமத்துடன் தொடங்கியது. 17ம் தேதி சிவாச்சாரியார்களை அழைத்து வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து முதற்கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 8:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை, 9:15 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. காலை 10:15 மணிக்கு பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் விமானம், ராஜகோபுரம் மகா கும்பாபிேஷகம், மூலவர் மகா கும்பாபிேஷகம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிநடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர்பங்கேற்றனர். மாலை 5:30 மணிக்குமகாபிேஷகம், இரவு 9:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடந்தது. -விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் ராமசாமி தலைமையில், செயல்அலுவலர் அகிலாண்டேஸ்வரர், மீனாட்சிபுரம் லலிதா முத்துமாரியமம்மன் அறக்கட்டளை தலைவர் எம்.அருணாசலம், செயலாளர் வி.அய்யப்பன், பொருளாளர் ஏ.டி.ஏ.என்.பி.ராமசுப்பிரமணியன், துணை தலைவர்கள் எஸ்.எல்.என்.எஸ். விஸ்வநாதன், எஸ்.கலை செல்வன், துணை செயலாளர்கள் கே.ஆர்.கருப்பையா,எஸ்.கே.எம்.பெரிய கருப்பன், டிரஸ்டிகள் எஸ்.சுப்பிரமணியன், என்.என்.எல்.நாச்சியப்பன், என்.ரவிசர்மா, ஜி.ரத்தினம், வி.ஆர்.சண்முகநாதன், கணக்கர் அழகுபாண்டி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.நகராட்சி சார்பில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நகராட்சி ஆணையர் விஜயலட்சுமி, மகன்லால் மேத்தா ரஞ்சன் மேத்தா, நிதுல்மேத்தா, தினலட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன்செந்தில்குமார், கிட் அன்ட் கிம் கல்லுாரி இயக்குனர்கள், கல்லுார் ஜெயசத்யா அரிசி ஆலை இயக்குனர்கள் கல்லுார் ராஜ், மாணிக்கவாசகம், சங்கராபுரம் ஊராட்சி தலைவர் மாங்குடி, மகரிஷி பள்ளி தாளாளர் சேதுராமன், நிர்வாக இயக்குனர் அஜய் யுக்தேஷ், உஷா மார்பிள் நிர்வாக இயக்குனர்கள், ஆர்.எம்.ஆர். சில்க்ஸ் சீனிவாசன், விஜய், சுபலட்சுமி குரூப் சந்திரமோகன், விமலாசந்திரமோகன், மூன்ஸ்டார் கேமராஇயக்குனர் எல்.எம்.லட்சுமணன்.அ.தி.மு.க., மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் தேர்போகி பாண்டி, கண்ணங்குடி ஒன்றிய இணை செயலாளர் செல்வி பாண்டி, சாந்திரோடுவேஸ் பி.எல்.சரவணன், பி.எல்.பழனியப்பன், பி.எல்.ஆனந்த், சரவணா ஜூவல்லரி கணேசன், ஆனந்த் குமார், மலேசியா எல்.முருகேசன், மகாராஜா ஆயில் மில் உரிமையாளர்கள் மகாராஜன், பெவின், ஜனப்பிரியா மளிகை ஸ்டோர் உரிமையாளர்கள், நித்யா மோட்டார் கே.சோமசுந்தரம், ராமலிங்கா கோல்டு கவரிங் முத்துராமன், ஸ்ரீவாரி குரூப்ஸ் கலை செல்வன், பிரண்ட்ஸ் ஓட்டல் உரிமையாளர் வேலு, ஒன்றிய தி.மு.க., துணை செயலாளர் சொக்கலிங்கம், டி.ஆர்.எஸ்.பாத்திரக்கடை இயக்குனர் சேகர், அய்யப்பா டெக்ஸ்டைல்ஸ் சுந்தர், அன்னை தெரசா ஜூவல்லர்ஸ் ஆரோக்கியம், யுனிவர்சல் அகாடமி முத்துராமன், ஆதினம், அன்னை மார்பிள் பாஸ்கரன், எம்.எஸ்.பி.சேதுராமன் அன்கோ நிறுவனத்தினர், புரொபஷனல் கூரியர் ராஜேந்திரன், ராகவேந்திரா மெட்ரிக். பள்ளி செயலர் கார்த்திக், அன்னை புரோமோட்டர்ஸ் மைக்கேல், டாக்டர் கவிதா ரமேஷ்,கற்பக மூர்த்தி டி.வி.எஸ்.கே.ஆர்.சி.டி.சுப்பிரமணியன், எஸ்.கே.எம்.பில்டர்ஸ் பெரிய கருப்பன், வீர லேனாஸ் ஜூவல்லரி லேனா.லெட்சுமணன், பழனியப்பன், முத்துக்குமரன் மற்றும் மீனாட்சிபுரம் மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement
 
Advertisement