Advertisement

காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் மார்கழி விடையாற்றி உற்சவம்

காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் மார்கழி மாத விடையாற்றி உற்சவம் நடந்தது. காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி மாதம் முழுவதும் ஆண்டாளின் திருப்பாவை தினத்தோறும் வாசிக்கப்பட்டு சொற்பொழிவும் சிறப்பு பூஜைகளும் நடந்தது.

மார்கழி மாத விடையாற்றி உற்சவம் நேற்று நடந்தது.உற்சவர் நித்ய கல்யாண பெருமாள் ஸ்ரீதேவி சமேதராக ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளினார்.அங்கு ஆண்டாளுடன் ஏகாசனத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.அதைத்தொடர்ந்து தீபாரதனை மற்றும் சாற்றுமுறையும் சமபந்தி விருந்து நடந்தது. கானும்பொங்கள் தினத்தில் பக்தர்கள் பலர் கோவில்களில் குடும்பத்துடன் சென்று வழிப்பட்டனர்.விடையாற்றி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிப்பட்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி ஆசைதம்பி மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement