Advertisement

பழமை வாய்ந்த பாலமுருகன் மலைக்கோவில் புனரமைப்பு

ஆர்.கே.பேட்டை: பழமை வாய்ந்த பாலமுருகன் மலைக்கோவில், புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், படிகள் மற்றும் வாகன பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஆர்.கே.பேட்டை ஒன்றியம், விடியங்காடு ஊராட்சிக்கு உட்பட்டது, முந்தானை மலை எனும், நெல்லி மலை. வேலுார் மாவட்டம், வள்ளிமலைக்கு அருகே, திருவள்ளூர் மாவட்ட எல்லையில் உள்ளது.

பாலமுருகனின் பாத சுவடி இந்த மலையில் இருப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மலை மீது, 2015ல், கோவில் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. வெங்கடாபுரம், வேணுகோபால புரம், மிளகாய்குப்பம் பகுதிவாசிகளின் பங்களிப்புடன், கோவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பக்தர் ஒருவரே, கட்டுமான பணிகளை முன்னின்று மேற்கொண்டார். கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தற்போது சுற்றுச்சுவர், மலைக்கோவிலுக்கு படிகள் மற்றும் வாகனங்கள் செல்லும் பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இரண்டாம் ஆண்டாக, கடந்த வியாழக்கிழமை தைப்பூசம் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement
 
Advertisement