Advertisement

ராமேஸ்வரம் கோயிலில் சிவராத்திரி விழா துவக்கம்

ராமேஸ்வரம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பிப்., 28 வரை விழா நடக்கிறது. ராமேஸ்வரம் கோயிலில் ஆடி திருக்கல்யாணம், மாசி சிவராத்திரி விழா முக்கியத்துவம் வாய்ந்தது. மகா சிவராத்திரி விழா நேற்று துவங்கியது. சுவாமி சன்னிதி முன் கொடி மரத்தில் கோயில் குருக்கள் கொடி ஏற்றினர். தொடர்ந்து சுவாமி, பர்தவர்த்தினி அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. கோயில் தக்கார் குமரன் சேதுபதி, இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர். சிவராத்திரி (பிப்.,24) அன்று கோயிலில் இருந்து சுவாமி புறப்பாடு, வெள்ளி ரதத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா நடக்கும். பிப்., 25ல் தேரோட்டம், பிப்.,26ல் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

Advertisement
 
Advertisement