Advertisement

27 அடி உயர மணிகண்டன் சுவாமி கோவிலில் மண்டலாபிேஷகம் நிறைவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, ஆதி அய்யப்பன் கோவிலில், 27 அடி உயர மணிகண்டன் சுவாமி சிலைக்கு மண்டல அபிேஷகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரம் அருகே க. உண்ணாமுலைபாளையம் கிராமத்தில், கடந்த, 1990ல், பூமிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட மணிகண்டன் சுவாமி சிலையை வைத்து, கோவில் கட்டி பூஜை நடக்கிறது. கோவில் அமைந்துள்ள குன்றின் மீது, 27 நட்சத்திரங்கள் அடிப்படையில், 27 அடி உயர மணிகண்டன் சிலை புதிதாக, கடந்த ஜன., 1ல் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிேஷகம் நடந்தது.

தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று விக்னேஷ்வர பூஜை, கணபதி ேஹாமம், மஹா லட்சுமி பூஜை, பூர்ணாஹூதி, மஹாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீரை, மேளதாளம் முழங்க எடுத்து சென்று, காலை, 11:45 மணிக்கு, 27 அடி உயர மணிகண்டன் சுவாமி சிலைக்கு அரிபுத்திர சுவாமிகள் மண்டல அபிேஷகம் செய்தார். இதேபோல், விநாயகர் சன்னதி, ஆதி அய்யப்பன் சன்னதியிலும் கலச நீரை கொண்டு அபிேஷகம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement