Advertisement

மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகாசிவராத்திரி திருவிழா துவங்கியது

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகாசிவராத்திரி திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான கழிப்பிடவசதி, ஆடை மாற்றும் தடுப்பு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் சிரமப்பட்டனர்.

தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகாசிவராத்திரி திருவிழா பிப்23, துவங்கியது. வெள்ளிக்கிழமை இரவு சிவராத்திரி என்பதால் திண்டுக்கல், பண்ணைக்காடு, மதுரை, வத்தலக்குண்டு மற்றும் தேனி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

அடிப்படை வசதிகள் இல்லை: வழக்கமாக திருவிழா காலங்களில் மஞ்சளாற்றில் இருந்து ஆற்றில் திறந்து விடப்படும். நடப்பு ஆண்டு அணையில் திறக்கப்பட்ட நீர் வெள்ளி இரவு 11 மணிவரை ஆற்றில் நீா் வரவில்லை. இதனால் பெட்டி சுத்தம் செய்து அலங்காரம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் அக்னி சட்டி, காவடி எடுப்பதவார்கள் மற்றும் கோயிலில் இரவில் தங்கியுள்ள பக்தர்கள் ஆற்றில் குளித்து விட்டு உடை மாற்றுவதற்கு தற்காலிகமான தடுப்புகள் இல்லை. கோயிலின் தெற்கு பக்கம் உள்ள ஆண்கள், பெண்கள் கழிப்பிடத்தில் நீர். இல்லாமல் பூட்டப்பட்டிருந்தது. தேவையான தண்ணீர் வசதி ஏற்படுத்த வில்லை.

விளக்கு வசதி போதிய அளவு இல்லாததால் பக்தர்கள் அச்சம்: கோயில் நுழைவு வாயில் ஆர்ட்ச், ஈஸ்வரன் கோயில், பிள்ளையார்கோயில் பின் புறம், மஞ்சளார் செல்லும் ரோடு, காமாட்சி அம்மன் கோயில் பின் புறம் விளக்கு வசதி செய்யவில்லை. இதனால் இப்பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் அசு்சத்துடன் சென்று வந்தனர். இருட்டில் நடந்த பாட்டுக்கச்சேரி: விளம்பரதாரா்கள் சார்பில் இரவு பாட்டுக் கச்சேரி நடந்தது. கச்சேரி நடந்த மேடையில் விளக்கு வசதி இல்லை. இதனால் பாட்டுக்கச்சேரி இருட்டுக் கச்சேரியாக நடந்தது.

புகார் யாரிடம் செல்லது: வெளியூர்களில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் குறைகளை யாரிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் சிரமப்பட்டனர். கோயில் நிர்வாக அலுவலரை தொடா்பு கொள்ள முடியவில்லை.

பக்தர்கள் பேட்டி: ராமசாமி, வத்தலக்குண்டு: பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் சார்பில் ஆண்டு தோறும் செய்து தரப்படும். நடப்பு ஆண்டு கோயில் திருவிழாவில் கழிப்பிடம், தண்ணீர் கிடைக்காமல் பக்தர்கள் சிரமப்பட்டனர்.

பாலு, தேனி: கோயில் நுழைவுப்பகுதி, மஞ்சளார் செல்லும் ரோடு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் கழிப்பிடத்திற்காக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கோயில் நிர்வாகத்தின் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு கூறினர்.

Advertisement
 
Advertisement