Advertisement

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் கொடியேற்றம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் நேற்று கொடியேற்றம் நடந்தது. இக்கோயிலில் பிப்.23 பூத்த மலர் பூ அலங்காரம், மறுநாள் பூச்சொரிதல், தொடர்ந்து சாட்டுதல் விழா நடந்தது. நேற்று கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பாலபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. பின், அம்மன் உருவம் பொறித்த கொடியை கோயிலின் நான்கு ரதவீதி வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கோயில் பூஜாரி ஏற்றினார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மார்ச் 3 ல் அம்மன் நாகல் நகர் புறப்பாடு நடக்கிறது. அறங்காவலர் சண்முக முத்தரசப்பன், ராமகிருஷ்ணன்பிள்ளை அங்கம்மாள் அறக்கட்டளையை சேர்ந்த பரம்பரை பூஜாரி நாகராஜன், மாரிமுத்து, ராஜேந்திரன், நாகேஸ்வரன், குமரேசன் கலந்து கொண்டனர்.

Advertisement
 
Advertisement