Advertisement

மதுரை சித்திரை திருவிழா: ஏப். 28ம் தேதி கொடியேற்றம்!

மதுரை: புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம், வரும் ஏப். 28ம் தேதி நடக்கிறது. மே: 7ம் தேதி திருக்கல்யாணமும், மே: 8ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. வரும் மே: 10ம் தேதி அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றனர்.

ஏப்ரல்: 28, 2017 (வெள்ளிக்கிழமை) சித்திரை திருவிழா கொடியேற்றம் கற்பகவிருட்சம், சிம்மவாகனம்
ஏப்ரல்: 29, 2017 (சனிக்கிழமை) பூத, அன்னவாகனம்
ஏப்ரல்: 30, 2017 (ஞாயிற்றுக்கிழமை) கைலாசபர்வதம்-காமதேனு வாகனம்
மே: 1, 2017 (திங்கட்கிழமை) தங்கப்பல்லக்கு
மே: 2, 2017 (செவ்வாய்க்கிழமை) வேடர்பரிலீலை-தங்க குதிரை வாகனம்
மே: 3, 2017 (புதன்கிழமை) சைவ சமய ஸ்தாபித வரலாற்றுலீலை ரிஷபவாகனம்
மே: 4, 2017 (வியாழக்கிழமை) நந்திகேசுவரர்-யாளி வாகனம்
மே: 5, 2017 (வெள்ளிக்கிழமை) ஸ்ரீமீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம்-வெள்ளி சிம்மாசனம் உலா.
மே: 6, 2017 (சனிக்கிழமை) ஸ்ரீமீனாட்சி திக்கு விஜயம்-இந்திரவிமான உலா.
மே: 7, 2017 (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்-யானை வாகனம், புஷ்பபல்லக்கு
மே: 8, 2017 (திங்கட்கிழமை) திருதேர் தேரோட்டம், சப்தாவர்ணச்சப்பரம்
மே: 9, 2017 (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி, வெள்ளி விருஷப சேவை, கள்ளழகர் எதிர்சேவை
மே: 10, 2017 (புதன்கிழமை) ஸ்ரீகள்ளழகர் வைகைஆற்றில் எழுந்தருளல் 1000 பொன்சப்பரத்துடன்-இரவு சைத்யோபசாரம் வண்டியூர்
மே: 11, 2017 (வியாழக்கிழமை) கள்ளழகர் வண்டியூர் தேனூர் மண்டபம், காலை-சேஷவாகனம், மதியம்- கருடவாகனம், மண்டூக மகரிஷி மோட்சம், இரவு-தசாவதார காட்சி ராமராயர் மண்டபம்
மே: 12, 2017 (வெள்ளிக்கிழமை) காலை-மோகனவதாரம்-இரவு கள்ளழகர் திருக்கோலம், புஷ்பப்பல்லக்கு மைசூர் மண்டபம்
மே: 13, 2017 (சனிக்கிழமை) கள்ளழகர் திருமலை எழுந்தருளல்.

Advertisement
 
Advertisement