Advertisement

சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷக ஆண்டு விழா

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அடுத்துள்ள சூலக்கல் விநாயகர் மாரியம்மன்கோவிலில், கும்பாபிேஷகம் முடிந்து முதலாவது ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில், கலச நீர் வைத்து சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. பின், மாரியம்மனுக்கு, பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், திருநீறு, பஞ்சாமிர்தம் உட்பட 30 வகையான பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. பின் வேள்வியில் வைக்கப்பட்ட கலச நீரை அம்மனுக்கு ஊற்றி அபிேஷக பூஜை செய்தனர். பகல், 12:30 மணியளவில் மாரியம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், கிணத்துக்கடவு, சூலக்கல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வழிபட்டனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement
 
Advertisement