Advertisement

சங்கமேஸ்வரர் கோவில் உண்டியல்கள் திறப்பு

பவானி: சங்கமேஸ்வரர் கோவில் உண்டியல்கள் நேற்று எண்ணப்பட்டன. பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், இராஜகோபுரம், சங்கமேஸ்வரர் சன்னதி, வேதநாயகி அம்மன் சன்னதி, பெருமாள் சன்னதி, துணை கோவில்களான காசிவிஸ்வநாதர் கோவில், பழனியாண்டவர் கோவில் உள்ளிட்ட பல இடங்களில், 21 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை நேற்று திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 39 கிராம் தங்கம், 176 கிராம் வெள்ளி, 9.54 லட்சம் ரூபாய், காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. பண்ணாரி கோவில் துணை ஆணையரின் பிரதிநிதி ஜெயபூரணம், திருப்பூர் உதவி ஆணையர் ஹர்சினி, சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையாளர் ராஜா, ஈரோடு கோவில் ஆணையாளர் பாலசுந்தரி முன்னிலை வகித்தனர். எண்ணும் பணியில், பவானி மனவளக்கலை மன்றத்தினர், சித்தோடு அம்மன் கல்லூரி மாணவர், கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Advertisement
 
Advertisement