Advertisement

மழை பொழிய வேண்டிபெண்கள் நூதன வழிபாடு

திருப்பூர்: மழை பொழிய வேண்டி, மாரியம்மனை மஞ்சள் நீரால் குளிர்வித்து, பெண்கள் வழிபட்டனர். மழை பொய்த்து, எங்கும் வறட்சி நிலவுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து, மக்களை வாட்டி வதைக்கிறது. இச்சூழலில், வெப்பத்தை தணிக்கவும், மழை வேண்டி யும், மங்கலம் அருகேயுள்ள அக்ராஹாரபுத்தூரில், பொதுமக்கள் நூதன வழிபாடு நடத்தினர். ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், கிராம பெண்கள் இணைந்து, நூற்றுக்கணக்கான தீர்த்தக்குடங்களில் மஞ்சள் நீர் மற்றும் வேப்பிலை கொண்டு, அதிகாலை முதல், மாரியம்மனுக்கு தொடர்ந்து அபிஷேகம் செய்தனர். <உச்சிகால பூஜை நேரமான, பகல் 12:00க்கு, பல்வேறு திரவியங்களால், அபிஷேகம் செய்து, வேப்பிலை, எலுமிச்சை உள்ளிட்டவற்றால், சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். அப்பகுதி பெண்கள் கூறுகையில், மாரியம்மனுக்கு மஞ்சள் நீர், வேப்பிலை ஆகியவற்றால் அபி ஷேகம் செய்து, குளிர்வித்துள்ளோம். வெயிலின் தாக்கம் குறைந்து, மழை பெய்ய அம்மனுக்கு இந்த வழிபாடு நடத்தியுள்ளோம், என்றனர்.

Advertisement
 
Advertisement