Advertisement

மோகனூர் மாரியம்மன் கோவில் விழா பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

மோகனூர்: மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மோகனூர், மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த,, 10ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று காலை, 6:00 மணிக்கு, தீக்குண்டம் ஏற்படுத்தப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, ஆற்றுக்கு சென்று பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும், ஊர்வலமாக வந்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். மாலை, 4:00 மணிக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள், ஆற்றில் புனித நீராடி, ஊர்வலமாக வந்து, கோவில் முன் ஏற்படுத்தப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு, 7:00 மணிக்கு, மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு கிடா வெட்டு, நாளை, (ஏப்., 26), காலை, 10:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு, மோகனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஆற்றில் தீக்குண்டம் இறங்கும் பக்தர்கள் புனித நீராடும் வகையில், பைப் மூலம் தண்ணீர் வினியோகம் செய்தனர்.

Advertisement
 
Advertisement