Advertisement

காமாட்சி அம்மன் கோவிலில் பொருட்கள் பாதுகாப்பு அறை

காஞ்சிபுரம் : காமாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை பாதுகாக்கும் அறை, நேற்று முதல் செயல்பட துவங்கியது. காஞ்சிபுரத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கொண்டு வரும் பொருட்களை வைக்க பாதுகாப்பு அறை வசதி எந்த கோவிலிலும் ஏற்படுத்தவில்லை. அதே போல, காலணிகள் வைக்கும் அறை வசதியும் கிடையாது. தற்போது பாரம்பரிய நகர மேம்பாட்டு திட்டத்தின் மூலம், ஏகாம்பர நாதர், வரதராஜப் பெருமாள் கோவில்களில் அந்த வசதி ஏற்படுத்த அதற்கான பணி நடக்க இருக்கிறது. காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிப்ரவரி மாதம் முடிந்தது. அந்த பணியின் போது, கோவில் உட்புறத்தை அழகுபடுத்தும் வேலைகளும், பக்தர்கள் வசதிகளையும் அதிகரித்து உள்ளனர். தற்போது வெளியூர்களில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் உடைமைகளை பாதுகாக்க வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கிழக்கு கோபுரம் அருகில் பொருட்கள் பாதுகாப்பு அறை வசதி இலவசமாக துவக்கப்பட்டு உள்ளது. காலை, 6:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரையும், மாலை, 4:00 மணி முதல், இரவு, 8:30 மணி வரையும் பொருட்கள் வைக்கும் அறை திறந்திருக்கும்.

Advertisement
 
Advertisement