Advertisement

சஞ்சீவராயர் கோவில் சீரமைப்பு பணி நிறுத்தம்

காஞ்சிபுரம்: ஐயங்கார்குளம், சஞ்சீவராயர் கோவில் சீரமைப்பு பணி கிடப்பில் உள்ளதால், விரைந்து முடிக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் பகுதியில், பழமையான சஞ்சீவராயர் கோவில் உள்ளது. விஜய நகர பேரரசு காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் நிர்வாகத்தின் கீழ் இந்த கோவில் உள்ளது. கோவில் எதிரில், 133 ஏக்கரில் பெரிய குளம் உள்ளது. கோவில் கோபுரம் மற்றும் மூலவர் சன்னதி முன் அமைந்துள்ள மண்டபம் சுற்றுச்சுவர், மடப்பள்ளி ஆகியவை சிதிலமடைந்து இருந்தன. அவற்றை சீரமைக்க பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், 2014ம் ஆண்டு, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணி துவங்கியது. ஆறு மாதத்தில் அந்த வேலை முடியும் என, அப்போது கூறப்பட்டது. பணி, பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளாக தடைபட்டுள்ள கோவில் பணி, அப்படியே இருப்பதால், விரைந்து முடிக்க பக்தர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Advertisement
 
Advertisement