Advertisement

அழகு நாச்சியம்மன் கோவில் வரும் 5ல் கும்பாபிஷேகம்

திருப்பூர் : கோவில்வழியில் உள்ள, அழகு நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும், 5ம் தேதி காலை, நடைபெறுகிறது. திருப்பூர், கோவில் வழியில் உள்ள, நூற்றாண்டு பழமை வாய்ந்த பெரிய அழகு நாச்சியம்மன், பொன்னழகி அம்மன், சின்னம்மன் கோவில், கோவில்வழி காணியாளர் மாடைகுல மக்களால் புனரமைக்கப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம், வரும், 5ம் தேதி நடக்கிறது.வரும், 3ம் தேதி, பெருமனை பிள்ளையார் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், முளைப்பாலிகை ஊர்வலம் துவங்குகிறது. காவடியாட்டம், பூக்காவடி நடனம்; 4:00 மணிக்கு, வள்ளிக்கும்மி நிகழ்ச்சி; அதை தொடர்ந்து, திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, மண்ணெடுத்தல், முளையிடுதல், காப்பணிதல் உள்ளிட்டவை நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு, மூல மூர்த்திகள் யாக சாலைக்கு எழுந்தருளல், முதல்கால வேள்வி, பேöராளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் நடக்கிறது.

வரும், 4ம் தேதி காலை, இரண்டாம் கால வேள்வி நிறைவு பெற்றவுடன், விமான கலசம் நிறுவப்படுகிறது. இரவு, கொங்கு பண்பாட்டு மையத்தின், அகநானூறு பாடல் பெற்ற உள்ளிவிழவு என்ற கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம் நடக்கிறது. வரும், 5ம் தேதி, காலை, 6:00க்கு, மூல மூர்த்திகளுக்கு ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. கன்னிமார், அப்பாத்தா, ஒன்பான்கோள், கருப்பண்ணசாமி, விளக்குக்கம்பம், குதிரை, துவாரசக்தி குடநீராட்டு, 6:30 க்கு நடக்கிறது. ஜூலை, 5ம் தேதியன்று காலை, 7:30 மணிக்கு நான்காம் கால வேள்வி, நாடி சந்தனம், திருமுறை விண் ணப்பத்தை தொடர்ந்து, பஞ்ச வாத்தியத்துடன் திருக்குடங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு, கும்பாபிஷேகம்; 9:45 மணிக்கு, மூலமூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெறும். தொடர்ந்து, அருளுரை, பதின்மங்கல காட்சி, அன்னதானம் நடக்கிறது.

Advertisement
 
Advertisement