Advertisement

திருநெல்வேலி நெல்லையப்பர் தேரோட்ட விழா: தேர்கள் தூய்மைப்பணி துவக்கம்

திருநெல்வேலி;நெல்லையப்பர் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா, தேரோட்டத்திற்கான பணிகள் துவங்கியுள்ளன.திருநெல்வேலியில் நடுநாயகமாக அருள்பாலிக்கும் நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில்ஆண்டுதோறும் நடக்கும் ஆனிப்பெருந்திருவிழா பிரசித்திபெற்றதாகும். தமிழகத்தின்மிகப்பெரிய தேர்களில் ஒன்றான நெல்லையப்பர் தேரோட்டம் தேரோட்டம் ஜூலை 7ம் தேதி நடக்கிறது. இதற்கான விநாயகர் கொடியேற்றம் கடந்த 11ம் தேதி நடந்தது. பிரதான கொடியேற்றம் வரும்ஜூன் 29ம் தேதி நடக்கிறது. சுவாமி தேர் நேற்று தீயணைப்பு படையினரால்தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. இன்னொரு புறம் தேர்ச்சக்கரங்களை நிறுத்தும் சசறுக்கு கட்டைகள்,திரைச்சீலைகள் போன்றவை தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது. நெல்லையப்பர் கோயில்அருகே மாநகராட்சி திடலில் நேற்றுமுன்தினம் அரசு பொருட்காட்சியும் துவங்கியுள்ளது.குற்றாலத்தில் குளுகுளு சீசன் துவங்கியுள்ள இவ்வேளையில் நெல்லையிலும் தேரோட்ட விழா களைகட்டியுள்ளது.

Advertisement
 
Advertisement