Advertisement

திருவள்ளூர் ஜலநாராயணருக்கு ஏகாதசி அபிஷேகம்

திருவள்ளூர்: சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள ஜலநாராயணர் சன்னதியில், ஏகாதசியை முன்னிட்டு, நேற்று, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, திருவள்ளூர், பூங்கா நகரில் அமைந்துள்ள சிவ -விஷ்ணு கோவிலில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ஜலநாராயணரை போல், 11 தலை ஆதிசேஷன் நாகத்தின் மேல் நர்த்தன ரூபத்தில், சங்கு, சக்கரம், கடாயுதம், அட்சய பாத்திரத்துடன் கூடிய நான்கு கரத்துடன், ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து அருள்கின்ற ஜலநாராயணி தாயார் உடனுறை ஜலநாராயண பெருமாளை, இக்கோவிலில் தத்ரூபமாக உருவாக்கி உள்ளனர். ஏகாதசியை முன்னிட்டு, நேற்று, காலை 8:00 மணிக்கு, லட்சுமி ஹயக்கிரீவருக்கு அபிஷேகம், காலை 8.30 மணிக்கு, சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம், அதை தொடர்ந்து, ஜலநாராயணி தாயார் மற்றும் ஜலநாராயணருக்கு, காலை, 9:30 மணியளவில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. பின், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

Advertisement
 
Advertisement