Advertisement

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடித்தபசு திருவிழா

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் வருடந்தோறும் ஆடித்தபசு திருவிழா நேற்று காலை 10:30மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனும்,சுவாமியும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா அடுத்த மாதம் 4 ந்தேதி நடைபெற உள்ளது.தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் இரவு மண்டகப்படிதாரர்கள் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான ஏற்பாடுகளை மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் முருகேசன், ஸ்தானிகர் அழகிய சுந்தரபட்டர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Advertisement
 
Advertisement