Advertisement

பழநி கோயிலில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு

பழநி: பழநி முருகன்கோயில் ராஜகோபுரம், சிற்பவேலைப்பாடு, தொன்மையான பழங்கால கற்சிற்பங்களை சென்னை தொல்லியல் துறையினர் ஆய்வுசெய்தனர். பழநி மலைக்கோயில் அதன் உபகோயில்களான திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன்கோயில், பெரியாவுடையார் கோயில் உள்ளிட்டவைகள் பலநுாறுஆண்டுகள் பழமையானவை. சேரன், சோழர், பாண்டியர் காலத்து மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். தற்போது பெரியநாயகியம்மன் கோயிலில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக திருப்பணிகள் நடக்கிறது. இதேப்போல மலைக்கோயிலும் வரும் 2018ல் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணிகளை துவங்க கோயில்நிர்வாகம் தயராகி வருகிறது. அதில் ஒருகட்டமாக கோயில் துணை ஆணையர் (பொ) மேனகா மற்றும் சென்னை தொல்லியல்துறை அலுவலர் வசந்தி மற்றும் அதிகாரிகள் மலைக்கோயிலில் ஆய்வு செய்தனர்.

இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில்,“ பழநி மலைக்கோயில், உபகோயில்களில் பழங்கால கற்துாண்கள், சிலைகள், சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள் உள்ளன. அவற்றை பழமைமாறாமல் புதுப்பிக்கவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இதற்காக முதற்கட்ட ஆய்வுசெய்து புகைப்படம் எடுத்துள்ளனர்.,”என்றார்.

Advertisement
 
Advertisement