Advertisement

திருத்தணியில் விநாயகர் சிலைகள் விற்பனை

திருத்தணி : ராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்த நான்கு குடும்பத்தினர், திருத்தணியில் தங்கி, விநாயகர் சதுர்த்திக்காக, பல வகையான விநாயகர் சிலைகளை தயாரித்து, விற்பனை செய்து வருகின்றனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா, வரும், 25ம் தேதி, கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, 2 அடி உயரத்தில் இருந்து, 15 அடி உயரம் வரை உள்ள பல வகையான விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.திருத்தணி - - அரக்கோணம் சாைலயில், மகா விஷ்ணு நகர் எதிரில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, நான்கு குடும்பத்தினர், ஒரு மாதமாக குடிசை போட்டு தங்கி, விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள், விஷ்ணு, சிவன், பிரம்மா போன்ற, 10க்கும் மேற்பட்ட வடிவங்களில், விநாயகர் சிலைகளை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், களிமண்ணால் தயாரித்து, அதற்கு வண்ணம் தீட்டி விற்பனை செய்து வருகின்றனர். குறைந்தபட்சம், 1,000 முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை, விநாயகர் சிலைகள் விற்கப்படுகின்றன.

Advertisement
 
Advertisement