Advertisement

கதம்பவன காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழா

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் ஸ்ரீகதம்பவன காளியம்மன்கோவிலில் 7 ஆம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவை முன்னிட்டு மிளகாய் வத்தல் நிகும்பலா யாகம் நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் ஸ்ரீகதம்பவன காளியம்மன்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆவணி 6 ஆம் தேதி நடந்தது.

அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகத்தை நினைவுபடுத்தும் வகையில் ஸ்ரீகதம்பவன காளிக்கு மிளகாய் வற்றல் நிகும்பலா யாகம் மற்றும் மற்றும் அபிஷேக தீபாராதனை நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து இந்தாண்டு 7 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நிறைவு பெறுவதை தொடர்ந்து நேற்று காலை 6.00 மணிக்கு மங்கள இசையுடன் கணபதி, நவக்கிரக ேஹாமங்கள், திரவிய ேஹாமங்கள், உள்ளிட்ட விஷேச ேஹாமங்கள் நடந்தது. அதனை தொடர்ந்து 10.00 மணிக்கு ேஹாமத்தில் 2 மூட்ளை சிகப்பு மிளகாய் வற்றல் கொட்டி நிகும்பலா சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் யாகத்தில் விஷேச பூஜைகள் செய்த கலச ஊர்வலமாக கோவிலை வளம்வந்து மூலவர் ஸ்ரீகதம்பவன காளிக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. தீபாராதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு விபூதி, குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் கதம்பவன் காளிக்கு சந்தனகாப்பும், பம்பை முழுங்க சிறப்பு தீபாராதனையும், காளிவேடமிட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சாமிகும்பிட்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எறும்பூர் கிராம பொதுமக்கள் செய்தனர்.

Advertisement
 
Advertisement