Advertisement

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பேட்டரி கார் வசதி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரதவீதியில் செல்ல கூடுதல் பேட்டரி கார் வசதி இன்றி பக்தர்கள் அவதிப்படுகின்றனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் 20 ஆயிரம் வட, தென் மாநில பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கோயில் மற்றும் பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக மாநில அரசுக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து 2013ல் கோயில் நான்கு ரதவீதியில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர்.

இதனால் ரதவீதி, சன்னதி தெரு, அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயிலுக்கு செல்ல முடியாமல் வயதான பக்தர்கள், பெண்கள் சிரமம் அடைந்தனர். இதன் பின், ராமேஸ்வரம் நகராட்சி சார்பில் 5 பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு, அதனை பராமரிக்காமல் பழுதாகி பயன்பாடின்றி போனது. பின் கடந்தாண்டில் ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் சார்பில் 3 பேட்டரி கார்கள் இயக்கப்படுகிறது. இக்காரில் ஒரு பக்தருக்கு ரூபாய் 5 கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் பக்தர்கள் கூட்ட நெரிசலுக்கு 3 பேட்டரி கார்கள் போதுமானதாக இல்லாததால், 400 முதல் 600 மீட்டர் துாரம் வரை பக்தர்கள் நடந்து கார் பார்க், வாடகை ஆட்டோ ஸ்டாண்ட் தேடி செல்லும் அவலம் உள்ளது. இதனால் பெண்கள், வயதான பக்தர்கள், குழந்தைகள் நடக்க முடியாமல் அவதிபடுகின்றனர். எனவே பக்தர்கள் நலன் கருதி கூடுதல் பேட்டரி கார்கள் இயக்க கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும் என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.

Advertisement
 
Advertisement