Advertisement

144 வருடங்களுக்கு பின் மயிலாடுதுறையில் மகா புஷ்கர விழா கோலாகலம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு பின் காவிரி மகா புஷ்கரம் விழா கோலாகல தொடங்கியது. காஞ்சி சங்கராச்சாரியார்கள், ஆதின குருமகா சன்னிதானங்கள் மற்றும் ஆயிரகணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

காவிரி மகா புஷ்கரம் என்பது குரு பகவான் கன்னி ராசியில் இருந்து காவிரி நதிக்கு உரிய துலாம் ராசிக்கு மாறும் குருபெயர்ச்சி காலத்தில் கொண்டாடப்படும் விழா. புஷ்கர காலங்களில் காவிரியில் நீராடுவதால் பிதுர் தோஷம், பிரம்ம ஹத்தி தோஷம், நதி தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்கலான நீங்கி வறுமை, பஞ்சம், அகன்று செழுமைய டைந்து உலகம் சுபிட்சம் பெருகும். மேலும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணங்கள் கொடுத்து பாவங்களை போக்கிகொள்ளலாம். காவிரி மகா புஷ்கரம் விழா 12 குருப் பெயர் ச்சிகளை கடந்து 144 ஆண்டுகளுக்கு பின் இன்று 12ம் தேதி தொடங்கி 24 ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த 12 நாட்களில் காவிரி துலாக் கட்டத்தில் புனித நீராடினால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் நீராடிய பலன்கள் கிடைக்கும்.

கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புன்னிய நதிகள் தங்கள் பாவங்களை போக்கிகொள்ள ஐப்பசி (துலாம்) மாதத்தில் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் 30 நாட்கள் தங்கி புனித நீராடி பாவங்களை போக்கிகொண்டது என்பது ஐதீகம். இத்தலம் காசிக்கு இணையான தலமாக கருதப்படுகிறது. அதனால் மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ் கரம் விழாவிற்காக பக்தர்கள் புனித நீராடுவதற்காக ரிஷபதீர்த்த மண்டபத்தை சுற்றி 100 மீட்டர் நீளத்தில் நீத்தேக்கம் அமைக்கப்பட்டு நீர்த்தேக்கத்தில் உள்ள பழங்கால கி ணறுகள் 11ம் சீரமைக்கப்பட்டுள்ளது.

காவிரி மகா புஷ்கரம் விழாவின் தொடக்க நாளான இன்று(செப்12ல்) அதிகாலை முதலே பேரூர் இளைய ஆதினம் மருதாச்சல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், துலாக்கமிட்டி தலைவர் சுவாமி ராமானந்த மகராஜ் மற்றும் ஏராளமான துரவிகளும், பக்தர்களும் காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடினர் தொடர்ந்து காவிரியின் தென்கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள காவிரி தாய்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பூஜைகளை வேத சிவ ஆகம பாடசாலை முதல்வர் சாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலானோர் நடத்தி வைத்தனர். அதனையடுத்து அங்குள்ள கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவா ன தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் காவிரி மகா புஷ்கரம் விழா கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து காவிரி துலாக்கட்டத்தின் இரு கரைகளிலும் மாயூரநாதர், வதான்யேஸ்வர சுவாமி, உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு துலாக்கட்டத்திற்கு வர கடத்தில் வைக்கப்பட்டிருந்த நீரை, காஞ்சி மடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் துலாக்கட்ட காவிரி நீத்தேக்கத்தில் உற்றி புனிதப்படுத்தினார். அதனையடுத்து ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சன்மூக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதினம் சிவப்பி ரகாச தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதினம் சங்கரலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வீரராகவ சுவாமிகள் மற்றும் ஆதின இளைய சன்னிதானங்கள், கட்டளை தம்பிரான்கள் புனித நீராடினர். அவர்களையடுத்து 5 ஆ யிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த நீர் தேக்கத்தில் புனித நீராடினர்.

காவிரி மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை முழுவதும் 4 மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொ ண்டுள்ளனர். எஸ்பி., சேகர் தேஷ்முக் சஞ்சை தலைமையில் 1000 போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் பாதுகாப்பிற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கே மராக்கள் பொறுத்தப்பட்டிருந்தன. போலீசாருடன் கல்லூரி மாணவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement
 
Advertisement