Advertisement

கொம்பூதி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

கீழக்கரை, ஏர்வாடி, கொம்பூதி கண்ணபிரான் கோயிலில் 34ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு சுதர்ஸன ஹோமம் செய்யப்பட்டு காலை 7:00 மணிக்கு விநாயகர் கோயிலில் இருந்து 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது. சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவு 11:00 மணியளவில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு 12.01 மணிக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மதுரா யாதவர் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாமினை ஏ.டி.எஸ்.பி. வெள்ளைத்துரை துவக்கி வைத்தார். தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில துணைத்தலைவர் ஏ.எம்.செல்வராஜ் முன்னிலை வகித்தார். வேலுமாணிக்கம் குழுமத்தை சேர்ந்த வேலுமாணிக்கம் மனோகரன், முதுகுளத்துார் எம்.எல்.ஏ., மலேசியா பாண்டியன், சோனைமீனாள் கல்லுாரி தாளாளர் ரெங்கநாதன், ஆர்.கே.சாமி., பி.எட்., கல்லுாரி தாளாளர் விஜயன், அஜித் என்டர்பிரைசஸ் ஹரிதாஸ், தேவிபட்டினம் கிருஷ்ணா பள்ளி தாளாளர் கணேச கண்ணன், வி.சண்முகராஜ், பாலசுப்பிரமணியன், எஸ்.ஐ., லிங்கப்பாண்டி, முத்து, பி.முத்துக்குமார், சபரிகுரு, சரவணக்குமார், பிரசாத், டி.ராஜா, ஒருங்கிணைப்பாளர் பூமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். இன்று காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, 11:00 மணிக்கு கயிறு இழுக்கும் போட்டி, பகல் 12:00 மணிக்கு 20 அடி உயரமுள்ள வழுக்கு மரத்தில் ஏறும் போட்டி, உறியடி உற்சவம், மாலையில் தேரோட்டமும் நடக்கும். ஏற்பாடுகளை யாதவர் சங்கம் மற்றும் விழாக் கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement