Advertisement

செல்வ விநாயகர் கோவில் குளம் கழிவு நீர் குட்டையான பரிதாபம்

சுங்குவார்சத்திரம் : கழிவு நீர் குட்டை போல மாறிய கோவில் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரி பராமரிக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை யில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த சுங்குவார்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது.

2 ஏக்கர் குளம்: இந்த கோவிலுக்கு பின்புறம், 2 ஏக்கரில் குளம் உள்ளது. கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், இந்த குளம், அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது. காலப்போக்கில் குளத்தை சுற்றி, ஏராளமான கடைகள் வந்ததால், குளத்தின் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியேறும் கழிவு நீர், குளத்தில் கலக்கிறது. மேலும், வணிக கடையில் சேரும் குப்பை, இறைச்சி கழிவுகளும் குளத்தில் கொட்டப்படுகின்றன. இதனால், எப்போதும் நிரம்பி காணப்படும் இந்த குளம், கழிவு நீர் குட்டையாக மாறி, துர்நாற்றம் வீசுகிறது.

கோரிக்கை: குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்; குளத்தை பாதுகாக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டிய வருவாய் துறையினர், மெத்தனம் காட்டி வருகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தை துார்வாரி பராமரிக்க வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement
 
Advertisement