Advertisement

உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கோபுரத்தில் வளர்ந்து வரும் செடிகள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாத சுவாமி கோயில் கோபுரத்தில் பராமரிப்பு இல்லாமல் செடிகள் வளர்ந்துள்ளது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உத்திரகோசமங்கை கிராமத்தில் மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயில்உள்ளன. இதில் மங்களநாத சுவாமி கோயில் கோபுரத்தில் ஏழு நிலைகள் உள்ளன. இதில் முழுவதும் கற்களால் ஆன முதல் மட்டத்தில் இருந்து நிலைகள் அனைத்தும் சிமென்ட் கான்கிரீட்டால் எழுப்பப்பட்டுள்ளது. இது மிகப்பழமையான கோயில் கோபுரமாகும். அதன் அருகிலேயே மங்களேஸ்வரி அம்மனுக்கு கல் கட்டடம் மட்டும் இருந்து வந்தது. இதனை ஐந்து நிலைகள் கொண்ட கோபுரமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிமென்ட் கான்கிரீட்டால் ஆன கோபுரம் கட்டப்பட்டது. இந்த இரு கோபுரங்களும் அருகருகே உள்ளன. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையினரால், பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இங்கு கோபுரத்தின் கல் கட்டுமான பகுதியில் இருந்து சிமென்ட் கான்கிரீட் பகுதியில் தற்போது செடிகள் வளர்ந்து வருகிறது. இதனை கோயில் நிர்வாகத்தினர் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இது போன்ற கோபுரங்களில் வளரும் செடிகளை அப்புறப்படுத்தி, பராமரிப்பு செய்ய வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
 
Advertisement