Advertisement

திருத்தணி அம்மன் கோவில்களில் 21ல் நவராத்திரி துவக்கம்

திருத்தணி: முருகன் துணை கோவில்களான மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் மற்றும் காமாட்சியம்மன் கோவில்களில், 21ம் தேதி முதல், அக்.,5 வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான காமாட்சி அம்மன் உடனுறை சோளீஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழா, 21ம் தேதி துவக்கி, 30ம் தேதி வரை நடக்கிறது.விழாவை ஒட்டி, கொலு பொம்மைகள் கோவில் வளாகத்தில் வைத்து தினமும், இரு வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.இது தவிர, மூலவருக்கு தினமும் மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. மேலும், இரவு நேரத்தில் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இதே போல், திருத்தணி அடுத்த மத்துார் மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா, 21ம் தேதி முதல் அக்., 5ம் தேதி வரை, 13 நாட்கள் நடக்கிறது. விழாவை ஒட்டி, உற்சவர் அம்மன் மற்றும் கொலு பொம்மைகள் கோவில் வளாகத்தில், தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறும். தவிர, மூலவர் அம்மனுக்கு தினமும் அபிஷேகம் மற்றும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.மாலை, 6:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பரத நாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சிகள், 13 நாட்களும் நடைபெறும்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement
 
Advertisement