Advertisement

மயிலாடுதுறை காவிரி மகா புஷ்ரம் விழா: புனித நீராடிய தமிழக முதல்வர்

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு பின் காவிரி மகாபுஷ்கரம் விழா கடந்த 12ம் தேதி தொடியேற்றத்துடன், தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு புனித நீராடினால் மூன்னறை கோடி தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இவ்விழாவில் 9 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் க லந்துகொண்டு காவிரி துலாக்கட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த நீர்த்தேக்கத்தில் புனிதநீராடினர். இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை அடுத்து தமிழகஅரசு உத்தரவின் படி மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று காலை காவிரி துலாக்கட்டத்தை வந்தடைந்தது. இதனையடுத்து காலை கார் மூலம் மயிலாடுதுறைக்கு வந்த தமிழக மு தல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனி வழியாக வந்து காவிரி துலாக் கட்டத்திற்கு வந்தார். அவருக்கு புஷ்கரம் கமிட்டி சார்பில் ஒருங்கினைப்பாளர் மகாலட்சுமி மற்றும் நிர்வாகிக ள் வரவேற்றனர். பின்னர் முதல்வர் சங்கல்பம் செய்துகொண்டபின், காவிரியில் புனித நீராடினார். அவருடன் அமைச்சர்கள் ஓஎஸ். மணியன், சம்பத், எம்பி பாரதிமோகன் மற்றும் எம்எல்ஏகள் பவுன்ராஜ், ராதகிருஷ்ணன் ஆகியோரும் புனித நீராடினர். தொடர்ந்து துலாக்கட்டத்தில் நடைபெற்ற விழாவில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வ தி சுவாமிகள் காவிரி மகா புஷ்கர விழா மலரை வெளியிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெற்றுக்கொண்டார். இதனையடுத்து முதல்வர் மயிலாடுதுறையில் இருந்து நாகை புறப்பட்டார். அப்போது முதல்வரை சந்தித்த கரும்பு விவசாய சங்கத்தினர் கரும்புக்கான நிலுவைத்தொகையை வழங்கி, தடையின்றி ஆலையை இயக்ககோரி மனு அ ளித்தனர். முதல்வர் புனித நீராடியதை முன்னிட்டு துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராட தடைவிதிக்கப்பட்டிருந்தது. முதல்வர் வருகையையொட்டி ஏடிஜிபி விஜயகுமார் த லைமையில் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக காவிரி துலாக்கட்ட புஷ்கரத்தில் அமைச்சர்கள் காராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சபாநா யகர் தனபால் மற்றும் திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலர் புனித நீராடினர்.

Advertisement
 
Advertisement