Advertisement

காளாத்தீஸ்வரர் கோயில் திருப்பணி துவங்க நடவடிக்கை

உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிேஷகம் நடத்துவற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது,’’என, செயல் அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். உத்தமபாளையத்தில் உள்ள காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் பழமையானதும், பிரசித்திபெற்றதுமாகும். ராகுகேது சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாக உள்ளது. ராகுவும், கேதுவும் ஒரே வளாகத்தில் தம்பதி சகிதமாக எழுந்தருளியிருப்பது சிறப்பம்சமாகும்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ராகு காலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. 2004 ல் கடைசியாக திருப்பணி மற்றும் கும்பாபிேஷகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணி மற்றும் கும்பாபிேஷகம் செய்ய வேண்டும் என்பது ஆகம விதியாகும். எனவே இந்த கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிேஷகம் நடத்த ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்வந்தனர். ஆனால் சமீபத்தில் எந்த கோயிலில் திருப்பணி மற்றும் கும்பாபிேஷகம் நடைபெற்றாலும், முன்ன தாக தொல்லியல் துறையின் அனுமதி பெற வேண்டும் என்று சட்டதி ருத்தம் அறிமுகம் செய்யப் பட்டது. அதன்படி தொல்லியல் துறையி னர் சமீபத்தில் ஆய்வு செய்து அனுமதி வழங்கி சென்றுள்ளனர். இனி அறநிலையத்துறையின் பொறியாளர்கள் குழு பார்வையிட்டு மதிப்பீடுகள் தயாரிக்கும் பணி நடைபெற வேண்டும். கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், பொறியா ளர்கள் திருப்பணி தொடர் பான மதிப்பீடு செய்யும் பணியை துவக்க உள்ளனர். அது முடிந்தவுடன் திருப்பணி மற்றும் கும்பா பிேஷகம் நடத்தப்படும்,’’ என்றார்.

Advertisement
 
Advertisement