Advertisement

இடர்நீக்கும் இடைக்காட்டூர் சித்தர் ஜெயந்தி விழா

இடைக்காட்டூர்: சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூரில் அமைந்துள்ளது இடைக்காடர் சித்தர் கோயில். இக்கோயிலில் இடைக்காட்டூர் சித்தர் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இன்று புரட்டாசி மாதம் 25ம் தேதி (செப்.11ல்) சுபயோக சுபதினத்தன்று மாலை திருவிளக்கு பூஜை (சித்தரின் ஒளிதேக தரிசனம்) மற்றும் இடைகாடர் சித்தரின் திருவீதி உலா, அதனைத் தொடர்ந்து. நாளை (12ம் தேதி)வியாழக்கிழமை சப்தமி திதியும், திருவாதிரை நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தன்று இடைக்காட்டூர் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சவுந்தர நாயகி ஸமேத ஆழி மணிகண்ட ஈஸ்வரர் அருளுடனும், பாலசுப்ரமணியர் அருளுடனும் அனைத்து தேவர்களின் திருவருள் புடைசூழ விளங்கும் பூலோக அமிர்தலோகமாகிய இடைக்காட்டூர் நவக்கிரஹ கோயிலில், இடைக்காட்டூர் சித்தர் ஜெயந்தி வைபவம் (புரட்டாசி திருவாதிரை விழா) கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

குரு ஆராதனை நிகழ்வுகள்:
11-10-2017, புதன்கிழமை மாலை 5 மணிக்குமேல் - திருவிளக்குபூஜை (சித்தரின் ஒளி தேக தரிசனம்) இரவு 9 மணிக்குமேல் - இடைகாடர் சித்தர் திருவீதி உலா

12-10-2017, வியாழக்கிழமை காலை 7.40 மணிக்குமேல் - சிறப்பு ஹோமங்கள், காலை 8.15 மணிக்குமேல் - கஜபூஜை, கோபூஜை, காலை 11 மணிக்குமேல் - சிறப்பு அபிஷேக ஆராதனைகள், காலை 12 மணிக்குமேல் - அன்னப்ரஸாதம் (அன்னதானம்).

Advertisement
 
Advertisement