Advertisement

7. ஞான சாஸ்தா

வாக்கு வன்மையளிக்கும் தட்சிணாமூர்த்தி ஸ்வரூப சாஸ்தா தியான சுலோகம்: சாந்தம் சாரதச்சந்த்ர காந்தி தவளம் சந்த்ராபிராமானனம் சந்த்ரார்கோபம
காந்த குண்டலதரம் சந்த்ராவதாதாம்சுகம் வீணா புஸ்தகமக்ஷஸுத்ர வலயம் வ்யாக்யான முத்ராம் கரை: பிப்ராணாம்
கலயே ஸதா ஹ்ருதி மஹாசாஸ்தாரம் த்யாயேத் வாக் ஸித்தயே சாந்தஸ்வரூபனும், சரத்கால சந்திரனின் வெண்ணொளி உடையவரும், சந்திரன் போன்ற இனிய முகமுடையவரும், சந்திர சூர்யர்களுக்கு ஸமமான ஒளி பொருந்திய இரு குண்டலங்களை அணிந்தவரும், சந்திரன் போன்ற வெண் பட்டாடை அணிந்தவரும், வீணை, புஸ்தகம், ருத்ராக்ஷமாலை, சின்முத்திரை தரித்த கைகளையுடையவருமாகிய மஹாசாஸ்தாவை வாக்கு வன்மைக்காக எப்பொழுதும் இதயத்தில் தியானிக்கிறேன். ஓம் வீணா புஸ்தக தர தக்ஷிணாமூர்த்தி சாஸ்த்ரே நம: ஓம் ஞான விக்ஞான பலதாய நம
ஓம் ஞான விக்ஞானத்தின் பலனை அளிப்போய் போற்றி ஞான-ஞானத்தினுடையவும், விக்ஞான-விக்ஞானத்தினுடையவும், பல-பலனை, த-அளிப்பவன் ஞானம்: பகவானுடைய நிர்குண, நிராகார, நிரதிசய தத்துவங்களின் பெருமை, ரகசியம், ஆகியவற்றை அறிவது. விக்ஞானம்: குணங்களோடு கூடிய (ஸகுணமான) தெய்வத் திருமேனியின் தத்துவங்கள், லீலா விபூதிகள், ரகசியம், கல்யாண குண பைபவங்கள், மகிமை, பெருமை, நாம விசேஷம் இவற்றைப் பற்றிய உண்மையறிவு. இவ்விரண்டின் பலனைத் தருபவன். ஓம் ஸர்வக்ஞான ப்ரதாய நம
ஓம் எல்லா ஞானங்களும் அளிப்போய் போற்றி ஸர்வ-எல்லா, ஞான-ஞானத்தையும், ப்ரத-அளிப்பவன் இவ்வுலகில் சிறப்பாக வாழ்வதற்குத் தேவையான எல்லாத் துறைகளைப் பற்றிய அறிவுவையும் தன் பக்தர்களுக்கு வழங்குபவன். அது தவிற, எந்த ஒரு ஞானத்தையடைந்தால், மற்றெல்லா ஞானத்தையும் அடைந்ததாக ஆகுமோ, அல்லது எதையடைந்தபின் மற்ற ஞானம் தேவையற்றதாக ஆகிவிடுமோ, அந்த தன்னைப் பற்றிய ஞானமாகிய ஆத்ம ஞானத்தை அளிப்பவன்.

Advertisement
 
Advertisement