Advertisement

திருநள்ளார் சனிஸ்வரபகவான் கோவிலில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனிஸ்வரபகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று 2 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உலக பிரசித்தி பெற்றது. நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால் தினம் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரம் கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.

இக்கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா 2 அரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு வரும் டிச.19ம் தேதி சனிப்பெயர்ச்சிவிழா விருச்சிகத்திலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார். சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்து சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று சுமார் 2 லட்சம் பக்தர்கள் வருகைப்புரிந்தனர். திருநள்ளார் சனிஸ்வர பகவானை தரிசிக்க செல்லும் பக்தர்கள் முன்னதாக நளன்குளத்தில் நீராடி விட்டு பின் சனிஸ்வரபகவானை தரிசனம் செய்ய ராஜகோபுரம் எதிரே அமைக்கப்பட்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து பகவானை தரிசனம் செய்தனர். மேலும் வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் குடிநீர்,பிஸ்கட், உணவுபிரசாதம் ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் பக்தர்கள் பாதுகாப்புக்குறித்து எஸ்.பி.,மாரிமுத்து தலைமையில் பல்வேறு பகுதிகளில் போலீஸ்சார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

Advertisement
 
Advertisement