Advertisement

விருதுநகர் மாவட்ட கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

ராஜபாளையம் : மார்கழி திருவாதிரை நட்சத்திரையைமுன்னிட்டு விருதுநகர் மாவட்ட கோயில்களில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலில் 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்பட்ட இதன் விழாவின் முதல் நாளில் நடராஜர், அம்பிகை, மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையாருக்கு காப்பு கட்டி தினமும் மாலை 6:00 மணி முதல் 13 வகை அபிேஷகங்கள் நடந்தன. சிறப்பு அலங்காரங்கள் முடிந்து, நடராஜர் தாண்டவத்தை நினைவு படுத்தும் விதமாக இசைக்கேற்ப தாண்டவ தீபாராதனை நடந்தது. கோயில் ஓதுவார், மாணிக்கவசாகர் வேடமிட்டு திருவெம்பாவை பதிகங்களை பாடி பக்தர்களை பரவசப்படுத்தினார். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக 10 ம் நாளான நேற்று இரவு 3 :00 மணி முதல் அபிேஷகம், அலங்காரங்களுடன் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதன் பின் சுவாமி கோயில் பிரகாரங்களை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுற்றுப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இறைவனுக்கு படைக்கப்பட்ட திருவாதிரை களி பக்தர்களுக்குபிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவிந்தராஜ் தலைமையில் பன்னிரு திருமுறை மன்றத்தினர் செய்தனர்.

சிதம்பரேஸ்வரர் கோயில்: ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லுார் சிதம்பரேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. 10 நாள் திருவிழாவாக நடந்த நிகழ்ச்சியில்தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் அலங்காரம் நடந்தது. மாணிக்கவாசகர் வேடம் பூண்டு பதியம் பாடப்பட்டு, தினமும் அன்னதானம் நடைபெற்றது.கோயில் உள்பிரகாரத்தில் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடந்தது.

சொக்கர் கோயில்: *ராஜபாளையம் சொக்கர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் அபிேஷகம் அதிகாலை முதல் நடைபெற்றது. சுவாமி சர்வஅலங்காரத்தில் சிவகாமி அம்பாளுடன் காட்சியளித்தார். புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டு நகர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் நேற்று அதிகாலை விழா துவங்கியது. உற்ஸவருக்கும், சிவகாமியம்மனுக்கும்அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. பின்னர் மூலவருக்கு தேவார வழிபாடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உற்ஸவர் அம்பாளுடன் சேர்ந்து கோயில் முன் உள்ள மண்டபத்தில் அலங்கார சப்பரத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு திருவெம்பாவை பாடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனி பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபம் நடந்தது. பின்னர் பக்தர்கள் முன்னிலையில் கோ பூஜை , சுவாமிக்கு திருவாதிரைக் களி படையல் வழிபாடு செய்யப்பட்டது. இறுதி நிகழ்ச்சியாக சுவாமி அம்பாளுடன் சப்பரத்தில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.ஏற்பாடுகள நிர்வாக அதிகாரி சுந்தர்ராஜன், பக்தர்கள் செய்தனர்.

சிவகாசி: சிவகாசியில் திருவாதிரை திருவிழா சிவன் கோயில் மற்றும் முருகன் கோயில்களில் கொ ண்டாடப்பட்டது. இரவு 3:30 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியும் நடந்தது. இதையொட்டி நடந்த தேரோட்டத்தில் நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்க வாசகருடன் அலங்கரிக்கப்பட்ட செவ்வந்தி பூ தேரில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதுபோல் கடைக்கோயிலில் இருந்துபத்ரகாளியம்மன், மாரியம்மனும், காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து காமாட்சி அம்மனும் பூத் தேர்களில்அழைத்து வரப்பட்டு நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement