Advertisement

ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது, 101 அடி மூங்கில் கம்பம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தை அமாவாசையன்று குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இன்று கொடியேற்றத்துடன் குண்டம் விழா துவங்கியது. முன்னதாக, 101 அடி நீள கொடிக் கம்பத்திற்கு பட்டுச்சேலை, மல்லிகைப் பூ, மாவிலைத் தோரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட மூங்கில் கொடிக்கம்பத்தை மங்கல வாத்தியம் முழங்க வாணவேடிக்கைகளுடன் பக்தர்கள் எடுத்து வந்தனர். 101 அடி மூங்கில் கம்பம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 29ம் தேதி திங்கட் கிழமை நள்ளிரவு ஆழியாறு ஆற்றங்கரையில் உள்ள மயானத்தில் மயான பூஜை நடைபெறுகிறது.

Advertisement
 
Advertisement