Advertisement

மகாசிவராத்திரியை முன்னிட்டு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

ஒட்டன்சத்திரம்: மகாசிவராத்திரியை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை வளையபட்டி மகாலட்சுமி அம்மன் கோயிலில், பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழா நடந்தது. வளையபட்டி கிராமத்தில், ராயர்குல வம்சம் குரும்பா இன மக்களுக்கு சொந்தமான மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், மகாசிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். சிவராத்திரிக்கு மறு நாள் நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு, வேண்டிக் கொண்ட பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு 10 பெண்கள் உட்பட 21 பேரின் தலையில், பரம்பரை பூஜாரி பூஜப்பன் தேங்காய் உடைத்தார். நேற்று காலை பரம்பரையாளர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement
 
Advertisement