Advertisement

பாகுபலிக்கு மஹாமஸ்தாபிஷேகம்: சிரவணபெளகொலாவில் துவக்கம்

சிரவணபெளகொலா: சமணர்களின் கும்பமேளாவாக கருதப்படும், மஹாமஸ்தாபிஷேகம், கர்நாடக மாநிலம், சிரவணபெளகொலாவில், இன்று கோலாகலமாக துவங்குகிறது.கர்நாடகாவில், காங்கிரசைச் சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், சமணர்களின் புனித யாத்திரை தலமாக, சிரவணபெளகொலா உள்ளது.

88வது முறை: இங்குள்ள விந்தியகிரி மலையில், சமணர்களின் வழிபாட்டுக்குரிய, முதல் தீர்த்தங்கரர், ஆதிநாத்தின் மகன், பாகுபலியின் உருவச் சிலை உள்ளது. இதற்கு, 12 ஆண்டு களுக்கு ஒருமுறை, மஹாமஸ்தாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்நிகழ்ச்சி, சமணர்களின் மஹா கும்பாபிஷேகமாக கருதப்படுகிறது.இந்தாண்டு, மஹாமஸ்தாபிஷேகத்துக்கான முதற்கட்ட சடங்கு நிகழ்ச்சிகளை, 7ல், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, இன்று, மஹாமஸ்தாபிஷேகம் துவங்குகிறது. இந்நிகழ்ச்சிகள், 25 வரை நடைபெறும்.நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற நாடுகளில் இருந்தும், 40 லட்சம் பேர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.விந்தியகிரி மலையில் உள்ள, பாகுபலி சிலையின் உயரம், 57 அடி; ஒரே கல்லால் ஆனது. ஒரே கிரானைட் கல்லால் செய்யப்பட்ட, உலகின் பெரிய சிலை என்ற பெருமை, இதற்கு உண்டு. மஹாமஸ்தாபிஷேகம், முதன்முறையாக, 981ல், கங்கர்களின் ஆட்சியில் செய்யப்பட்டது. தற்போது, 88வது முறையாக, இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ரூ.300 கோடிஇதற்காக, 2 கி.மீ., சுற்றளவில், ஆயிரக்கணக்கான, டென்ட் கொட்டகைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மஹாமஸ்தாபிஷேகத்துக்கு, 300 கோடி ரூபாய் செலவிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
 
Advertisement