Advertisement

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழா: கொடிக்கம்பம் நிறுவுதல்

தேனி, வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடிக்கம்பம் நடப்பட்டது. பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகளுக்குப்பின் நேற்று காலை 8:00 மணி முதல் 8:30 மணிக்குள் கொடிக்கம்பம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கரக மஞ்சள் தீர்த்தம் ஆற்றில் இருந்து எடுத்து வந்து கொடிக்கம்பத்திற்கும், அம்மனுக்கும் அபிஷேகம் நடந்தது. தேனி பாஸ்கரன் எஸ்.பி., செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் , திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு திருக்கண் அபிஷேகம் நடந்தது. ஏப்.20 முதல் மே 8 வரை அம்மன் சிம்ம வாகன வீதி உலா, மண்டகப்படிகளில் எழுந்தருளல், மே 8 ல் மலர் விமானத்தில் அம்மன் ஊருக்குள் இருந்து கோயிலுக்கு பவனி வருதல், 9 ல் முத்துப்பல்லக்கில் புறப்பாடு, 10 ல் புஷ்பப் பல்லக்கு, 11ல் திருத்தேர் உலா, 14ல் தேர்நிலைக்கு வருதல், முத்துச்சப்பரத்தில் அம்மன் திருத்தேர்தடம் பார்த்தல், 15ல் ஊர்பொங்கல் நடக் கிறது. ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

Advertisement
 
Advertisement